14
தென்னைமரத் தீவினிலே...
செல்வச் செழுப்பில் வளர்ந்திருந்த அவர்களின் குழந்தைகள் உல்லாசமாக அந்த ஹால் முழுதும் சுற்றிச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
இந்தச் செல்வச் சூழல் நிறைந்த கூட்டத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒதுங்கினார் போல் வள்ளியம்மை தன் ஒரே மகனான அருணகிரியின் கையைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள். அருணகிரி ஒன்பதாவது வகுப்பு மாணவன். அவனும், அவன் தாயும், பரமகுருவைப் பார்க்கத்தான் வந்திருந்தார்கள்.
வள்ளியம்மை பரமகுருவின் ஒன்றுவிட்ட தங்கை. அவரது தாய் லட்சுமி அம்மாளின் மூத்த சகோதரி மகள். பரமகுருவும், அவர் தாயாரும் வள்ளியம்மையிடம் அளவற்ற அன்பு வைத்திருத்தனர். அவளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் லட்சுமி அம்மாள் கண் கலங்குவாள்.
வள்ளியம்மை நன்கு படித்தவள். மிகவும் புத்திசாலியான பெண். செல்வம் கொழிக்கும் பரம்பரையில் பிறந்த அவளை, சீரும் சிறப்புமாய் திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்த வேளையில்—
வள்ளியம்மை தன்னுடன் படித்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த கனகவிஜயனை விரும்பி மணந்து கொண்டாள். இதற்காக வள்ளியம்மையின் தாய் அவளை வெறுத்து ஒதுக்கி விட்டாலும்