பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

15

லட்சுமி அம்மாளும், பரமகுருவும் அவளிடம் அன்போடு பழகினர்.

ஆயினும், உள்ளூரில் இருக்கும் பணக்கார உறவினர்கள் பலருக்கும், இதனால் வள்ளியின்மீது வருத்தமும், விஜயன்மீது கோபமுமே மேலோங்கி இருந்தது.

இப்போதுகூட,

பரமகுரு தன் குடும்பத்துடன் இலங்கை புறப்பட்டு வருகிற விபரத்தை வள்ளிக்கு எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்ததுமே கனகவிஜயன் வள்ளியம்மையிடம், “யார் நம்மிடம் எப்படி இருந்தாலும், உன் அண்ணன் பரமகுரு நல்லவர். என்னால் இன்று மாலை கொழும்புவர இயலாது. கூட்டம் இருக்கு. நீ அருணகிரியை அழைத்துக் கொண்டு விமான நிலையத்திற்குப் போ. அங்கேயே அவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு வந்து விடு, கூட யார் வீட்டுக்கும் போக வேண்டாம்” என்று தன் மனைவியிடம் சொல்லி அனுப்பியிருந்தான். அதன் பேரிலேயே அவளும், மற்றவர்கள் போல விமான நிலையத்திற்கு வந்திருக்கிறாள்.

மவுனமாக நின்று கொண்டிருக்கும் தன் தாயிடம் அருணகிரி, “அவர்கள் எல்லாம் யாரும்மா? எதுக்காக நம்மைப் பார்த்துப் பார்த்துப் பேசிக்கறாங்க.” என்று கேட்டான்.

“அவர்களெல்லாம் நம்ம உறவுக்காரங்கதான். நம்மைப் போலவே அவர்களும் உன் மாமாவை