பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தென்னை மரத் தீவினிலே...

பெற்றுக் கொண்டு அவரவர் காரில் ஏறி புறப்பட்டனர்.

இந்த காட்சிகளை வள்ளியம்மையும், அருணகிரியும் எட்டி நின்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.

அவர்கள் சென்றதும், பரமகுரு தன் தாயாரோடு பேசிக் கொண்டு காரை நோக்கி நடத்தார். வழியில் பொன்னம்பலம் மாமாவும், பரமகுருவும், “நீங்கள் காருக்குப் போங்கள்; ஒரு நிமிஷத்தில் வருகிறேன்” என்று அவர்களிடம் கூறியபடி எங்கோ போனார்கள்.

இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்திற்காகவே அத்தனை நேரம் காத்திருந்த வள்ளியம்மை, அருணகிரியின் கரத்தைப் பற்றிக் கொண்டு வேக மாக நடந்து, லட்சுமி அம்மாள் அருகில் வந்து, “சின்னம்மா!” என்று மெல்ல கூப்பிட்டாள்.

சட்டென்று திரும்பிய லட்சுமி அம்மாள், தன் அருகில் நின்று கொண்டிருக்கும் வள்ளியம்மை யைப் பார்த்ததும், “வள்ளி...” என்று அன்போடு அழைத்தபடி அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

ஏழ்மையின் மொத்த உருவமாக வள்ளியம்மை காட்சி அளித்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க லட்சுமி அம்மாளுக்கு இதயமே வெடித்து விடும் போலிருந்தது. மற்றவர்களோடு அத்தனை