பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தென்னை மரத் தீவினிலே...

“கெட்டிக்காரன்! அப்பாவையும் கூட்டிக் கொண்டு வரக் கூடாதா?”

“அப்பாவுக்கு இன்னிக்கு ஒரு மீட்டிங் இருக்கு?”

“ம்...! இன்னும் அப்படியேதான் இருக்கிறான்!” லட்சுமி மெல்ல மனதிற்குள் சொல்லிக் கொண்டபடி, "நல்ல வேளை உங்களையாவது பார்க்கக் கிடைத்ததே; இன்னும் கொஞ்ச நேரம் தாமதமாக வந்திருந்தால் நாங்க போயிருப்போம். உனக்கும் ஏமாற்றமா இருந்திருக்கும்,” என்ற லட்சுமி அம்மாள் வருத்தம் தோய்ந்த குரலில்;

“வள்ளி! நீ என் பேரனையும், பேத்தியையும் பார்த்ததில்லையே,” என்று கேட்டபடி பாபுவையும், ராதாவையும் அவளிடம் காட்டி, “அத்தைக்கு வணக்கம் சொல்லுங்கள்,” என்றாள்.

அப்போது அங்கு வந்த பரமகுரு, “தங்கச்சி, சவுக்கியமா? எப்ப வந்தே?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தார். உடனே பாபு தன் தந்தையின் கையைப் பிடித்து இழுத்து காதருகே, “அப்பா, அருணகிரியாவது நம்ம கூட வரட்டும்; கூப்பிடு அப்பா,” என்று கெஞ்சுவது போல் கேட்டான்.

பாபு அதை ஒரு ரகசியம் போல் கூறினாலும், அவன் பேசியது எல்லார் காதிலும் விழுந்தது.

உடனே பரமகுரு, “ஏன் வள்ளி! பாபு ஆசைப்படுகிறான். அவனோடு ஊரைச் சுற்றிப் பார்த்துக்