பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தென்னை மரத் தீவினிலே...

அதே சமயம்-

புதிதாக தன் நாட்டிற்கு வந்திருக்கும் பாபுவின் அன்பான அழைப்பைப் புறக்கணிக்கவும் மனம் வரவில்லை. எல்லோருடனும் காரில் அமர்ந்து கொண்டு; இப்படி அவன் இருவித எண்ணங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது-

“அப்போ, நான் புறப்படுகிறேன் சின்னம்மா,” என்று விடைபெற்றுக் கொண்ட வள்ளியம்மை தன் மகனைப் பார்த்து, “நான் போயிட்டு வர்றேன் அருணகிரி; யாருக்கும் தொந்தரவு இல்லாம கவனமா நல்ல பிள்ளையாக நடந்து கொள். மாமாதான் உனக்கு எல்லாம்,” என்று மகனிடம் கூறி விட்டு எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டாள்.

பொன்னம்பலமாமாவின் இரு கார்களும் புறப்படத் தயாராய் இருந்தன.

ஒரு காரில் மாமாவும், லட்சுமி அம்மாளும் ஏறிக்கொண்டவுடன்; அது முன்னே புறப்பட்டுச் சென்றது. மற்றொன்றில் மாமியும், ராதாவும், பின் சீட்டில் இருந்தனர்; பாபுவும், அருணகிரியும் முன்புறம் டிரைவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்திருந்தனர்.

காரில் ஏறுமுன் பரமகுரு வள்ளியம்மையைப் பார்த்து, “வள்ளி! நீயும் காந்திமதி பக்கத்தில்