பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தென்னை மரத் தீவினிலே...

“அது தப்பு அண்ணா! எனக்கு அந்த மாதிரி நடந்து பழக்கம் இல்லே,” இதை கூறும்போது வள்ளியம்மையின் குரல் தழுதழுத்தது.

“ஒரு தப்பும் இல்லை; ஊரிலிருந்து நான் அனுப்புகிற பணத்தை ஒவ்வொரு தடவையும் விஜயன் திருப்பி அனுப்புகிறான். இதற்கு நான் அங்கு வந்து அவனோடு தனியாக சண்டை போடப்போகிறேன். இப்போது கூட, உனக்கும், விஜயனுக்கும், அருணகிரிக்கும் துணிமணிகள் வாங்கி வந்திருக்கிறேன். நானும் காந்திமதியும் வருகிறபோது கொண்டு வருவோம், இந்த விஜயன் வாங்காமல் என்ன செய்வான் பார்க்கலாம்.

“சரி! இதை வைத்துக் கொள் வள்ளி; மறுக்காதே. இது உன் அண்ணனின் ஆசை,” என்று பரமகுரு பிடிவாதமாகக் கூறியபோது, அதற்கு, மேலும் அவளால் அந்த இடத்திலிருந்து மறுத்துக் கொண்டிருக்கவில்லை.

“நான் வர்றேன் வள்ளி.” அவர் விழிகள் பனித்தன.

பரமகுரு காரில் ஏறி மனைவி அருகில் வந்து அமர்ந்தார்: அவர் மனம் ஏனோ தவித்தது.

முன்சீட்டில் அமர்ந்திருந்த அருணகிரி தன் தாய் கண்ணுக்கு மறைகிறவரை கையை ஆட்டி