பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தென்னைமரத் தீவினிலே...

சமையற்காரர்கள் இரண்டு மூன்று பேர் ஓடி ஓடி வந்து விதவிதமான பதார்த்தங்களையெல்லாம் அனைவருக்கும் பரிமாறினார்கள்.

‘என்னுடைய வாழ்நாளில் இத்தனை ருசியன இனிப்புப் பண்டங்களையெல்லாம் நான் சாப்பிட்டதே இல்லை,” என்று பாபுவிற்கு மட்டும் கேட்கும்படி மெல்ல அவன் காதருகே கூறினான் அருணகிரி

“ஊருக்கு வந்ததுமே பாபுவிற்கு நல்ல ஜோடி கிடைத்து விட்டது.” என்று கூறிய பொன்னம்பலம், அருணகிரியைப் பார்த்து, “ஏண்டா நீ பள்ளிக்கூடம் போறியா? எத்தனாவது படிக்கிறே?” என்று விசாரித்தார்.

“ஒன்பதாவது படிக்கிறேன்,” அருணகிரி தாழ்ந்த குரலில் பதில் கூறினான்.

“பரீட்சை முடிந்து லீவு விடும்போதெல்லாம் ஏதாவது கடை வேலைக்குப் போவேன் பள்ளிக்கூடம் திறந்ததும் வேலையை விட்டுவிடுவேன்.”

பரமகுருவும், காந்திமதியும், லட்சுமி அம்மாளும் அசந்து போனார்கள்! ஆனால், பொன்னம்பலம் அதைச் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டு பேசினார்.

“எப்படியோ புத்தியாய் படிச்சு முன்னுக்கு வந்தா சரி. அல்லாமெ, அப்பனைப்போல நீயும் கட்சி, தேசம்னு அலைஞ்சு அம்மாவை பட்டினி