பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5
தங்கமணியின் தங்க மனசு

ருணகிரி அம்மாவைப் பற்றிய சோக நினைவுகளுடன் தனது அறையில் அமர்ந்திருந்தான்.

அங்கு வந்த பாபு அவனைப் பார்த்ததுமே “ஏன் அருணகிரி என்னமோ போல் இருக்கிறாய்?” என்று அருணகிரியின் முகத்தை தூக்கிப் பிடித்து கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தான்.

“ஒன்றுமில்லையே!” என்று கூறிய அருணகிரி, துக்கத்தில் தடுமாறினான்.

இதற்குள் அங்கு வந்த தங்கமணியும், ராதாவும் அவ்விருவர்களையும் பார்த்து, “வீட்டைச் சுற்றிப் பார்க்கப் போகலாமா?” என்று கேட்டார்கள். இருவரும் அவர்கள் பின்னால் மாடிக்கு சென்றார்கள்.

தங்கமணி அங்குள்ள அறைகள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு பெயரை குறிப்பிட்டு கூறி