பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தென்னைமரத் தீவினிலே...

விளக்கினாள். பாபுவும், ராதாவும் ஆர்வத்தோடு அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தார்கள். அருணகிரி மட்டும் மவுனமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தான்.

“மேல் மாடிக்கு போகலாமா?” என்று அவள் கேட்டபோது, வேண்டாம் தங்கமணி காலெல்லாம் வலிக்கிறது. இந்த சோபாவில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்,” என்றான் பாபு.

உடனே அருணகிரி, “நீங்கள் இன்னும் இந்த ஊரில் எத்தனை நாள் இருப்பீர்கள்?” என்று கேட்டான்.

“ஒரு வாரத்திற்குள் திரும்பிவிட வேண்டும் காலாண்டு தேர்வு வேறு வருகிறது. மார்க்கு குறைந்தால் அம்மா லேசில் விடமாட்டாள். நானும், ராதாவும் சாலன்ஞ் பண்ணி அனுமதி வாங்கி வந்திருக்கிறோம். இல்லாவிட்டால், இந்த டிரிப் அப்பாவும், பாட்டியும் மட்டும்தான் வருவதாக இருந்தது,” என்றான்.

“ஒரு வாரம் எதற்கு இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க? காரில் போனால் ஒரே நாளில் கூட எல்லாவற்றையும் பார்த்து முடித்து விடலாம்,” என்றான் அருணகிரி. மகிழ்ச்சியில், பாபுவும், ராதாவும் கை தட்டி ஆர்பரித்தார்கள்.