பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

41

அருணகிரி, பாபு, ராதா தங்கமணி, காந்திமதி எல்லோரும் பின் சீட்டில் அமர்ந்தனர். கார் வீட்டை விட்டுப் புறப்பட்டு கடை வீதி வழியாகப் போய்க் கொண்டிருந்த போது “டிரைவர் வண்டியை இங்கே கொஞ்சம் நிறுத்துங்கள்,” என்று தங்கமணி கூறவே, கார் ஒரு ரெடிமேடு கடையில் நின்றது.

எதற்கு இவள் காரை நிறுத்தச் சொன்னாள் என்று மற்றவர்கள் யோசிக்கு முன், “ஐந்து நிமிஷம் அத்தை,” என்று கூறியபடி இறங்கிய தங்கமணி அருணகிரியின் அருகில் வந்து “வா என்னோடு” என்று அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, அநத ரெடிமேட் கடைககுள் நுழைந்தாள். அருணகிரி ஏதும் புரியாமல், அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

அந்த ரெடிமேடு கடைக்கு தங்கமணி, தன் தாயாரோடும் பாட்டியோடும் அடிக்கடி வருவது வழக்கம் அவர்களது வாடிக்கைக் கடை அதனால் அங்குள்ள அனைவருக்கும், பொன்னம்பலத்தின் பேத்தியான தங்கமணியைத் தெரிந்திருந்தது.

“வாங்க வாங்க,” என்று கடைசிப் பந்திகளும், கல்லாவில் இருந்தவரும் வரவேற்றார்கள். தங்கமணி அருணகிரியைச் சுட்டிக் காட்டி “இவன் பேரு, அருணகிரி; எங்களுக்கு உறவு இவன் அளவுக்கு இரண்டு பாண்ட், இரண்டு, ஷர்ட்டு,