பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தென்னைமரத் தீவினிலே...

அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்திருக்கிறான் உள்ளூரிலேயே நடக்கும் கூட்ட மென்றால், வள்ளியம்மையே, அருணகிரியையும் அழைத்துக் கொண்டு பெண்கள் வரிசையில் வந்து உட்கார்ந்து கேட்டாள். வீட்டிற்கு வந்ததும், கூட்டத்தில் தன்னை பலரும் புகழ்ந்ததைக் கூறி திருஷ்டி கழிப்பாள் இன்று அவர்கள் இருவரும் இல்லை.

விஜயன் வீட்டைப் பூட்டி திறவு கோலை பக்கத்து வீட்டு மாரியம்மாளிடம் கொண்டுபோய் கொடுத்தான்.

திட்டப்படியே குமரேசனும், விஜயனும் பாலஸ் கபேயில் காபி, பலகாரங்கள் சாப்பிட்டு விட்டு பஸ்சை பிடித்து மீட்டிங் நடக்கிற இடத்திற்கு வேகமாகப் போனார்கள்.

குறித்த சமயத்தில் விஜயன் அங்கு வந்து சேர்ந்தான் அவனுடைய வருகையை அறிந்ததும் கூட்டத்தில் சலசலப்பு மூண்டது. சக தொண்டர்கள் அவனுக்கு வணக்கம் கூறி மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

கனக விஜயன் ஈழத் தமிழ் இயக்கத்தில் முக்கிய தொண்டன் என்பதோடு, சிறந்த பேச்சாளனாகவும் இருந்ததால் அவனுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவனது ஆவேசமான பேச்சுக்களையும், அனல் பறக்கும் உரைகளை