பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



52

தென்னைமரத் தீவினிலே...

“இப்படிப் பழக்கப்பட்ட யானைகளை வைத்துக் கொண்டுதான் காடுகளில யானைகளை பிடிக்கிறார்கள்,” என்றார் கனகசபை

இவர்கள் செல்லும் காரை கடந்து அடிக்கடி மாடி பஸ்கள் பல ஓடிக் கொண்டிருந்தன, அவற்றின் வயிற்றிலும், முகத்திலும், ‘சிலோன் டிரான்ஸ்போர்ட்’ என்று எழுதி இருப்பதை பாபு படித்தான்

கொழும்பு நகரிலுள்ள கடைகள் பொதுத் துறை ஸ்தாபனங்கள், அரசு அலுவலகங்கள். இவற்றிலுள்ள பெயர் பலகைகளிலெல்லாம் ‘சிங்களம், தமிழ், ஆங்கிலம்’ ஆகிய மூன்று மொழிகளிலும் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இதைப் பற்றி காந்திமதி கேட்ட போது, “தமிழ் மொழி இடம் பெறாத இடமே இல்லை என்று சொல்லலாம். மைல் கற்கள் சாலையிலுள்ள கை காட்டி பலகைகள் அனைத்திலும் இம்மொழித் திட்டம் பயன்படுகிறது” என்று விளக்கினார் கனகசபை

கொழும்பு கடை வீதியிலுள்ள ஆகாசக் கடையை அடையும் போது இரவு மணி ஏழடித்தது.

பார்க்கும் போதே அந்த ஆகாசக் கடை அனைவருடைய கருத்தையும் கவர்ந்தது இந்தக் கடையின் மேல் தளத்திற்கு, கனகசபை அனைவரையும் லிப்டில் அழைத்துக் கொண்டு சென்றார்; அங்கு காண்டீன் மற்றும் பற்பல வணிக நிறுவனங்