பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

53

களும் இருந்தன. பொது மக்கள் ஏராளம் பேர் வந்து சாமான்கள் வாங்கிச் சென்றனர்.

காண்டினைப் பார்த்ததும், “பசிக்கிறதே அத்தை,” என்றாள் தங்கமணி, காந்திமதி சிரித்த படி அனைவரையும் காண்டீனுக்கு அழைத்துச் சென்றாள்,

“இங்குள்ள பொருள்களின் விலை மற்ற இடத்தை விட அதிகமாய் இருந்தாலும், பொருள் தரமாய் இருக்கும்,” என்றார் கனகசபை.

எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்தமான அயிட்டங்களை பெயர்ப் பலகையைப் பார்த்து ஆர்டர் செய்தனர்,

பில்லைக் கொடுத்துவிட்டு காண்டீனை விட்டு எல்லோரையும் கனகசபை, ஆகாசக் கடையின் மேல்தளத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கிருந்து பார்த்தபோது கொழும்பு நகர் முழுவதும் தெரிந்தது. அந்த இரவு வேளையில் அந்நகரின் தோற்றம்; வண்ண வண்ண விளக்குகளால் வைரப் பொட்டு வைத்து கோலம் போட்டது போல் அழகுடன் ஜொலித்தது, கீழே இறங்கியவர்கள், வரிசையாக இருந்து ஒவ்வொரு கடைகளிலும் ஏறி இறங்கினார்கள். வரும்போது ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு பெட்டிகள் இருந்தன,

வெளியில் காரை எடுத்துக் கொண்டு போன பரமகுரு அப்போது தான் வீட்டினுள் நுழைந்

தெ-4