பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.54

தென்னைமரத் தீவினிலே...

நுழைந்தார். ராதாவும், தங்கமணியும், தாங்கள் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களையெல்லாம், ஹால் முழுதும் பரப்பியபடி, வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

“கடைத்தெருவை ஒரு அலசு அலசி விட்டீர்கள் போலிருக்கிறதே” என்று வேடிக்கையாகக் கேட்ட பரமகுருவிடம் தங்கமணி, “அப்பா, அப்பா, நம்ம வீட்டுக்கு புதிதா ஒரு விருந்தாளிப் பையன் வந்திருக்கான். பேரு அருணகிரி, ரொம்ப நல்லவன் அப்பா; அழகா இருக்கான். டிரஸ் பண்ணிக் கொண்டிருக்கான், உனக்கு அவனைத் தெரியுமா அப்பா” என்று படபடவென்று பேசினாள்.

“அது...சரி... எங்கே உன்னுடைய அழகான அந்த அழகுப் பையன்?” என்று பரமகுரு பதிலுக்குக் கேட்கவே, மாடியிலிருந்து இறங்கி வந்த அருணகிரியைச் சுட்டிக் காட்டி, “அதோ” என்று பாபு காட்டினான். பரமகுரு கடகடவென்று சிரித்தார்.

“டிரஸ் பிரமாத செலக்ஷன். நீ பார்த்து வாங்கினியா அருணாகிரி” என்று அவனை அணைத்த படி அன்போடு கேட்டார் பரமகுரு.

“இல்லை மாமா நான் வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் கேளாமல், தங்கமணிதான் என்னைப் பிடிவாதமாகக் கடைக்கு அழைத்துக் போய், ஒன்றுக்கு இரண்டாக இதெல்லாம் வாங்கிக் கொடுத்தா. இதையெல்லாம் வீட்டுக்குக் கொண்டு போனா-அம்மா திட்டுவாள்; எனக்கு என்னோடு