பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

57

தையும் பொன்னம்பலம் மனம் திறந்து அருணகிரியை எல்லாரிடமும் பாராட்டினார்.

இரவு சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் படுக்கச் சென்றார்கள் பாபு, ராதா, தங்கமணி, அருணகிரி எல்லாரும் நீண்ட நேரம் ஊர் சுற்றிப் பார்த்ததைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தில் தூங்கி விட்டார்கள்.

மறுநாள் காலை ஆறு மணிக்கே அவர்கள் எல்லோரும் இலங்கையை சுற்றிப்பார்க்க உல்லாசப் பயணம் கிளம்பப் போகின்றனர். அதற்கு, வழியில் உண்பதற்குத் தேவையான பலவித சித்ரான்ன உணவுவகைகள், வறுவல்கள், மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பதில் சமையல்காரர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். லட்சுமி அம்மாள் அதை மேற்பார்வை இட்டுக்கொண்டிருந்தாள்.

முன்ஹாலில் பொன்னம்பலம், பரமகுருவுடன் பேசிககொண்டே சிங்கப்பூர் பயணமாவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். கல்யாணி தன் கணவருக்கு வேண்டிய துணிமணிகளை அவரது பயனப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

போர்டிகோ வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு புறப்படத் தயாராக காரை நிறுத்திக் கொண்டு டிரைவர் காத்து நின்றான். உள்ளே சமையற்கட்டுவரை சென்று மேற்பார்வை பார்த்துவிட்டு சரியாக பத்தேகால்