பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

63

கும் கொழும்புவில் பல தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. என்ன இருந்து என்ன? ஒரே மகளான வள்ளியம்மை சீரும், சிறப்புமாய் வளர்த்து வந்தனர் சிவபாதம் தம்பதியினர். வள்ளியம்மை மேற்படிப்பிற்காக அந்தப் பள்ளியில் சேர்ந்த போது அதே வகுப்பிற்கு கனக விஜயனும் வந்தான். சாதாரண குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் . பேச்சில் மிகவும் வல்லவன். பள்ளி பேச்சுப் போட்டியில் பல பரிசுகள் பெற்று வந்தான். அடக்கமும், பண்பும் உள்ளவனாக இருந்தான்.

இந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக நெஞ்சுவலியினால் சிவபாதம் காலமானார். அப்போது ஞானாம்பாள் சகோதரி லட்சுமி அம்மாளும் வேதனையில் இருந்தாள். அவளது மாமா மயில்வாகனம் இறந்து போய் அவள் பரம குருவோடு தங்கியிருந்தாள் எனவே, ஞானம்பாளே தன் சகோதரி மூலம் வள்ளியம்மைக்கு பல விதங்களில் உதவினாள். திருமணத்திற்காக பெரிய இடமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் வள்ளியம்மை தான் “விஜயனைத் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது!” என்று கூறி விட்டாள்.

இந்த விஷயம் ஞானாம்பாளின் இதயத்தில் பேரிடியாக விழுந்தது. கனக விஜயன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும், மிகவும் ஏழைக்