பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

65

அழைத்துச் சென்றான். பல மாதங்களுக்குப் பிறகு, ஒரு சமயம் விஜயன் கண்டிக்கு சென்றிருந்தான். அப்போது ஞானாம்பாள் தன் சொத்துக்களையெல்லாம் பொன்னம்பலம் மூலம் விற்றுக் கொண்டு சிங்கப்பூரிலுள்ள தம்பியிடம் சென்று விட்டதாக தகவல் கிடைத்தது.

விஜயனின் படிப்பிற்கு தகுந்த வேலை உள்ளூரில் கிடைக்கவில்லை. சரியான வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் கஷ்டப்பட்டது, தன் தாயார் மனைவியுடன் பிழைப்பிற்காக கொழும்பிற்கு வந்து விட்டான்.

அருணகிரி பிறந்த பிறகு விஜயன் குடும்பத்திற்காக மட்டுமே அதிகமாக உழைத்தான். அதுவும் சிறிது காலத்தில் மாறிவிட்டது. இப்போதெல்லாம் விஜயனின் முழு மூச்சும் ஈழத் தமிழர்களை மேம்படுத்துவதிலேயே இருந்தது. இதற்கிடையில் விஜயனின் தாய் காலமானாள்.

தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்க இரவு பகல் உழைப்பது நாள் தவறாமல் கூட்டம், பேச்சு என்று ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் விளையாடுகிற போராட்டம் தான் விஜயனுக்கு.

இவ்வாறு சிந்தித்தபடி பாதி வழிக்குமேல் தடந்து, செம்மண் மேட்டருகே வரும்போது, எதிரே வந்த ஜீப் ஒன்று வேகமாக அவளை கடந்து