பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9
மனைவியைத் தேடி

பொதுக் கூட்டம் முடிந்ததும், கும்பலாக பலர் மேடை ஏறி வந்து விஜயனை வாழ்த்தினர். அன்றைய அவனது பேச்சு ஈழத் தமிழர்களின் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்று இளைஞர்கள் பலர் பாராட்டிச் சென்றனர்

பேச்சை முடித்ததிலிருந்தே விஜயனுடைய சிந்தனையெல்லாம் வீட்டிற்குப் போக வேண்டுமென்பதிலேயே இருந்தது விமான நிலையத்திற்கு போன மனைவியும், மகனும் இந்நேரம் வந்திருப்பார்கள். அண்ணனிடமிருந்து புதிது புதிதாக ஏதாவது சேதி கேட்டுக்கொண்டு வந்து மணிக் மணக்கில் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பாள் வள்ளியம்மை. தன் தாயாரைப் பற்றிக் கூட பேசுவதில்லை, பரமகுருவினிடம் அவளுக்கு அப்படியொரு பாசம் ஏற்பட்டு விட்டது