பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தென்னைமரத் தீவினிலே...

உண்மையில், பரமகுருவும் அப்படி ஒரு உன்னதமான மனிதன்தான் உறவு முறைகளைக் கடந்து, மனிதர்களை நேசிக்கத் தெரிந்தவர்.

வள்ளியம்மை பரமகுருவை வீட்டிற்கு வரும்படி அழைக்காமல் இருக்க மாட்டாள். இந்தத் தடவை பரமகுருவிடம் தன் செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு பரமகுருவின் அன்பிற்கும் நான் அடிமை என்பதை வள்ளிக்கு புரிய வைத்து அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்.

“விஜயன் அண்ணே.” என்று யாரோ பின்னால் இருந்து அழைக்கிற குரல்கேட்டு விஜயன் திருப்பிப் பார்த்தான். வந்தவன், வழியெல்லாம் ஒடி வந்த வன் போல் மூச்சிறைக்க, விஜயன் காதருகே குனிந்து ரகசியமாகக் கூறினான்.

“மனோகரனை கைது செய்து லாரியில் தூக்கிக்கொண்டு போய் விட்டார்களாம்! உங்களை உடனே அலுவலகத்துக்கு வரும்படி செல்லத்துரை அண்ணன் சொல்லி அனுப்பியிருக்காரு!”

“அப்படியா?” விஜயன் சிங்கத்தைப்போல் கர்ஜித்தான். மறு கணம் அவன் சிந்தனையிலிருந்து வீடு, வள்ளியம்மை, அருணகிரி, பரமகுரு அனைவருமே மறைந்து விட்டனர்.

உடனே விஜயன், அவனோடு கட்சி அலுவலகம் நோக்கி விரைந்து சென்றான்.