பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

69

கட்சி அலுவலகத்திற்குள் விஜயன் சென்ற நேரம் அங்கே அவனுடைய நண்பர்கள் பலர் சோகமாக உட்கார்ந்திருந்தனர்.

மனோகரன் கைதானது அவர்களுக்கு மிகுந்த மனக் கலக்கத்தை உண்டு பண்ணியது. அவர்கள் கூட்டத்தில் மனோகரன் ஒரு மல்யுத்த வீரனைப் போல் விளங்கியவன். தனி ஒருவனாகவே, ஆயுதங்களின்றி பல பேரை சமாளிக்கும் வலிமை படைத்தவன். எப்போதும் எச்சரிகையாகவும் செயல்படக் கூடியவன், ஒரு கட்டிடத்தின் வலுவான தூண் ஒன்றை இழந்தது போலவே விஜயனும் உணர்ந்தான்.

போலீஸ் லாரியைத் தொடர்ந்து சில தொண்டர்கள் சென்றிருப்பதால், எப்படியும் அவனை மீட்டுக் கொண்டு வருவார்கள் என்று அனைவரும் நம்பி இருந்தனர்.

அந்த நீண்ட இரவும், காலைப் பொழுதில் பெரும் பகுதியும் கடந்து விட்டன. விஜயனுக்கு அதற்குமேல் அங்கு பொறுமையுடன் இருக்க முடியவில்லை. சொல்லிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.

கூட்டத்தில் பேசியதும்; இரவு தூக்கமின்மையம்; நீண்ட நடையும் விஜயனை தள்ளாடச் செய்தன. அப்படியும் வேகமாக அவன் வீட்டை அடைந்தபோது அவனை வரவேற்க யாருமே{{rh|தெ-5||}