பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

75

தன்னுடைய வாழ்நாளில் விஜயன் அன்று தான் முதன் முதலாக அப்படிக்கதறி அழுதான். ‘இதுவே எனது முதலும் கடைசியுமான அழுகை’ என்பது போல் அப்படி அழுதான்.

‘என்ன நடந்தது? என் மகன் அருணன் எங்கே?’ என்று விஜயன் கனவிலிருந்து விழித்தவன் போல் கேட்டான்.

குமாரசாமி, விஜயனது தோளைத் தட்டியபடி சமாதானப்படுத்தி விஷயத்தைக் கூறினான்.

“இன்னிக்குக் காலையில் செம்மண்காடு வழியே வந்த நம்ம ஊருக்காரர் ஒருவர் வந்து என் கிட்டே வள்ளியம்மையை யாரோ வழியில் சுட்டுப் போட்டிருப்பதாகச் சொன்னார்!”

“இதைக் கேட்டதும், மாரியம்மா, நானும் வர்றேன்னு புறப்பட்டாள். யாருமே வேலைக்கு போகல்லே. ஆரோக்கியம், அசோகன், தமிழ்நம்பி, நான், மாரியம்மா எல்லோருமா மாரியம்மையைத் தேடிப் போனப்போ அங்கே வள்ளியம்மை இந்த கோலத்தில் மரித்து ஓரமாகக் கிடந்தாள்!” என்றார்.

“இனிமே என்ன செய்யலாம் தம்பி!”

“அருணகிரியை தேடி கண்டுபிடிக்க முடியுமா? வள்ளியம்மை விஷயத்தை தெரிஞ்சவங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்ப வேண்டாமா? எவ்வளவு அழுதாலும் இனிமே என் ராசாத்தி எழுந்திருந்து