பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தென்னைமரத் தீவினிலே...

வரப் போவதில்லை. பாவிங்க! என் உசிரைக் கேட்டாலும் கொடுத்திருப்பேனே நான் யாருக்காக தனியே வாழ்ந்து கொண்டு இருக்கேன்!” என்று புலம்பியபடியே ஆக வேண்டிய காரியங்களையும் நினைவுபடுத்தி விட்டாள் மாரியம்மாள் .

“வள்ளியம்மைக்கு இந்த ஊர்லே எத்தனையோ பணக்கார உறவுக்காரர்கள் இருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும். என்னை கல்யாணம் செய்து கொண்டதினால், அத்தனை பேருடைய உறவையும் அவள் விட்டவள். ஆனால், அவள் உயிருக்குயிராய் தன் அண்ணன் பரமகுருவைத் தான் எண்ணிக் கொண்டிருந்தாள். அவர்கள் இப்போதுசென்னையிலிருந்து, இங்கு பொன்னம்பலம் வீட்டிற்கு வந்து தங்கி இருக்கிறார்கள்,” என்று கூறிக்கொண்டே வந்த விஜயன் நிறுத்திவிட்டு ஒரு முறை திரும்பப் பார்த்தான்.

குமரேசன் ஒரு மூலையில் நின்றபடி அழுது கொண்டிருந்தான். குமரேசனை வள்ளியம்மை தன் சொந்தத்தம்பி மாதிரி எண்ணி நடத்தியவள். தாய், தந்தை இல்லாத அவன், தன் தூரத்து உறவினர் வீட்டில் தங்கி ஒரு மில்லில் வேலை செய்து வருகிறான். பாதிநாள் அவனுக்கு சாப்பாடு விஜயனோடுதான். லீவுநாள் என்றால் குமரேசன் இங்கே வந்துவிடுவான். கட்சி வேலையால் விஜயன் வீட்டில் இருப்பதே அபூர்வம். அருணகிரியையும், வள்ளியையும் கோயிலுக்குக் கூட்டிப்