பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

77

கூட்டிப்போவதும், கடைக்குச் சாமான்கள் வாங்க துணையாகப் போவதும் குமரேசன்தான்.

இனி அவனுக்கு வள்ளியைப் போல் உடன் பிறவாசகோதரி எங்கே கிடைக்கப் போகிறாள்!

“குமரேசா!” என்று தாழ்ந்த குரலில் விஜயன் அவனை அழைத்தான்.

“பொன்னம்பலம் வீட்டில் அவர்கள் எல்லாரும் இலங்கையைச் சுற்றிப் பார்க்கப் போயிருக்கிறார்கள். வீட்டில் யாருமே இல்லை. இந்நேரம் எல்லாரும் வந்திருப்பார்கள். குமரேசா நீ தான் அதற்கு தகுந்த ஆள். பரமகுருவை வெளியே தனியே அழைத்து வள்ளியம்மை இறந்த விஷயத்தையும், அருணகிரி காணாமல் போன விஷயத்தையும் சொல்லிவிட்டு வந்து விடு. அதன் பிறகு தான், நாம் வள்ளியம்மையின் இறுதிச் சடங்கை நடத்த வேண்டும்,” என்று ஒரே மூச்சில் கூறி முடித்தான் விஜயன்.