பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தென்னைமரத் தீவினிலே...

“குரு, நான் இறப்பதற்கு முன் இலங்கை கதிர்காம முருகனை ஒருமுறை தரிசனம் செய்துவிட வேண்டும்,” என்று ஓயாமல் கூறிக்கொண்டே இருந்தார் லட்சுமி.

ஆகவே இப்போது தாயாரின் உடல் நலம் சற்று தேறி இருக்கும்போது அவரது ஆசையை நிறைவேற்றி விடவேண்டும் என்று எண்ணிய பரமகுரு, “சரி அம்மா,” என்று சொல்லிவிட்டார்.

தன் தாயாரை அழைத்துச் செல்வதென்றால் அம்மாவுக்கு உதவியாக தன் மனைவியும் வர வேண்டும். எனவே, குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு, குடும்பத்தோடு போய் வரலாமே என எண்ணினார்.

இதைக் கேட்ட பாபுவும், ராதாவும் “தாங்க்யூ டாடி...” என்று மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக் கொண்டு உள்ளே ஓடினர்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு மறுநாள் வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படுகிற ‘ஏர்லங்கா’ விமானத்தில் குடும்பத்தோடு செல்வதற்கு பரமகுரு டிக்கெட் வாங்கிவிட்டார்.

பாபுவும், ராதாவும் பள்ளிக்கு ஒரு வாரம் லீவ் எழுதி அனுப்பிவிட்டனர். பயணம் நிச்சயமான உடனேயே பரமகுரு கொழும்பில் உள்ள தன் மாமா பொன்னம்பலம், சகோதரி வள்ளியம்மை,