பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11
இலங்கைச் சுற்றுலா

ன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பொன்னம்பலத்தின் ‘நைட்டிங் கேல்’ பங்களா விழித்துக் கொண்டு விட்டது. வெளி எங்கும் இருள் சூழ்ந்திருக்க, அந்த பங்களாவில் மட்டும் அறைக்கு அறை விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் பம்பரமாக சுழன்று தங்கள் காரியங்களில் மும்முரமாயிருந்தனர்.

காந்திமதி, தானும் குளித்துவிட்டு குழந்தைகளையும் குளிப்பாட்டி டிரஸ் செய்து விட்டாள். பாபு, ராதா, தங்கமணியும் தாயார் உதவியோடு செய்து கொண்ட அத்தனை காரியங்களையும் அருணகிரி தானே முடித்துக் கொண்டு தங்கமணி முன்தினம் வாங்கிக் கொடுத்த உடையை அணிந்து கொண்டான்.

சமையல் அறையில் விதம் விதமான சித்ரான்னங்களையும், வறுவல்களையும், சுவீட் வகைகளை