பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

79

யும் செய்து வரிசையாக பாத்திரங்களில் அடுக்கி வைத்தனர்.

வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தயார் நிலையில் ஒரு வேனும், பெரிய காரும் நின் றன. இரு டிரைவர்களும் குறியிட்டுக் கொண்டு பளிச்சென்று ‘யூனிபார்ம்’மில் காட்சியளித்தனர்.

கைடு கனகசபை வீட்டிலேயே குளியல் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்து விட்டார். பஸ் ஸ்டாண்டில் ஐம்பத்தைந்து சதத்திற்கு வாங்கி வந்த ‘ஈழகேசரி’ நாளிதழை வராண்டாவில் உட்காந்தபடி புறட்டிக் கொண்டிருந்தார்.

மிஸஸ். பொன்னம்பலம் நேரத்தை அனுசரிப் பதில் கண்டிப்பானவர். சரியாக ஆறு மணிக்கு எல்லாரும் கிளம்பிவிட வேண்டுமென்பது எஜமானியம்மாவின் ஏற்பாடு. எனவே அதை உணர்ந்து வேலைக்காரர்கள் ஒவ்வொரு வரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

சமையற் கூடத்தில் செய்து வைத்திருந்த உணவு வகைகள், குடி தண்ணீர் ஜாடிகள், உட்காருவதற்கான விரிப்புகள் எல்லாவற்றையும் ஒரு தனி காரில் ஏற்றினர். அவர்களோடு கூட உதவிக்குச் செல்ல வேண்டிய சிங்காரமும் தன்னை ரெடி செய்து கொண்டார்.

கல்யாணி அனைவரையும் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தபோது மணி ஆறு. எல்