பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தென்னைமரத் தீவினிலே...

லோரும் பளிச்சென்று ஆடைகள் அணிந்து அழகாக காட்சியளித்தனர், சாப்பிடுவதற்கான பாத்திரங்களையெல்லாம் காரில் ஏற்றிவிட்டு ஒரு சமையல்காரரும் வேலையாளும் அதில் ஏறிக் கொண்டனர்.

மற்றவர்கள் எல்லாம் பெரிய வேனில் ஏறிக் கொண்டனர். டிரைவருக்குப் பக்கத்து சீட்டில் முன்தினம் போலவே கைடு கனகசபையும், பாபுவும் ஏறிக்கொண்டனர். பின்புறம் மற்றவர்கள் எல்லாம் அமர்ந்து கொண்டனர்.

டிரைவர் வேல்சாமியிடம் புறப்படும்போதே எந்த ஊர்கள் வழியாகச் செல்ல வேண்டும்; எந்த ஊர்களை பார்த்துக் கொண்டு போக வேண்டும். என்பதையெல்லாம் முன் கூட்டியே விளக்கி விட்டார் கனகசபை அதனால் வேல்சாமி வண்டியை அதன்படி ஓட்டிக் கொண்டிருந்தார்.

அவர்கள் புறப்படும்பொழுது கொழும்பு நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. தெருவெங்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும், மனிதர்கள் நடமாட்டம் இல்லை.

கொழும்பு நகரத்தைக் கடந்து சுமார் பதினைந்து மைலில் உள்ள ‘கலனிய’ என்னும் ஊரில் அவர்கள் முதலில் இறங்கினார்கள்.

“தனது வாழ்நாளில் ஒருமுறை புத்தர் இங்கு. வருகை தந்ததாக மக்கள் கூறுகின்றனர். இங்கு