பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

81

‘கலனிய-கங்கா’ என்னும் நதி ஓடுகிறது!” என்றார் கனகசபை.

“இலங்கையில் நீங்கள் எல்லா இடங்களிலும் புத்தர் ஆலயங்களைப் பார்க்கலாம். இருப்பினும் கலனியாவும், அனுராதபுரமும் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்!” என்று கூறி அனைவரையும் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார். மூலவர் ஸ்தானத்திற்கு முன்னால் இருக்கும் புத்தர் இக்கோயிலில் படுத்திருக்கும் கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தார்.

“இதைப் பார்க்கும்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், அனந்த பத்மனாப சுவாமியும் நினைவிற்கு வருகிறது.” என்று காந்திமதி லட்சுமி அம்மாளிடம் கூறினாள்.

அனைவரும் ஏறிக் கொண்டவுடன் கார் புறப்பட்டது. அப்போது கனகசபை கூறினார்:

“நாம் இந்த ஒருநாள் இலங்கைப் பயணத்தில் எல்லா ஊர்களிலும் இறங்கிச் சுற்றிப் பார்த்து விட முடியாது. எனினும், முக்கியமான இடங்களை நாம் அவசியம் பார்க்கப் போகிறோம். நாம் இறங்கிப் பார்க்காத வழியிலுள்ள ஊர்களைப் பற்றி நான் விளக்கி விடுகிறேன்,” என்றார்.

“அது போதும் கனகசபை. முக்கியமாக நான் கதிர்காம முருகனை தரிசனம் செய்ய வேண்டுமென்றுதான் புறப்பட்டு வந்திருக்கிறேன். இருந்