பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தென்னைமரத் தீவினிலே...

“யாலர் காட்டில் நிறைய வன விலங்குகள் இருக்கின்றன. புலிகளும், யானைகளும் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. அழகிய மான்கள், மயில்கள் எல்லாம் இருக்கின்றன. இந்த காட்டிற்குள் செலவதானால், வன அதிகாரியிடம் உத்தரவு பெற்றுச் செல்ல வேண்டும், அவர் ஒரு வேட்டைக்காரரை உதவிக்கு அனுப்புவார். அல்லாமல் மனிதர்கள் தனியே போனால் உயிருக்கு ஆபத்து.” என்று கனகசபை விளக்கிக் கொண்டிருந்தபோதே “பாட்டி! நாம் இங்கே இறங்கி யானை, புலி, மான் மயில் எல்லாம் பார்த்துவிட்டுப் போகலாம் பாட்டி,” என்றான் பாபு.

உடனே காந்திமதி, “ஏண்டா பாபு, மானையும், மயிலையும் பார்க்கவா இலங்கைக்கு வந்திருக்கிறோம். சமயமிருந்தால் சரி, இன்னும் முக்கியமாய் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்ப வேண்டாமா?” என்றாள்.

முன்னும் பின்னுமாய் போய்க் கொண்டிருந்த கார், திரிகோணமலைக்கு போகும் வழியில் நின்றது.

“நாம் இப்போது கன்யா என்கிற சிற்றுாரில் இறங்கப் போகிறோம்! அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில்தான் திரிகோண மலை இருக்கிறது. குழந்தைகளுக்கெல்லாம் நான் இப்போது ஒருகதை