பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

7

மற்றும் அங்குள்ள உறவினர்கள் எல்லாருக்கும் தாங்கள் குடும்பத்துடன் இலங்கை புறப்பட்டு வருகிற தேதியை குறுப்பிட்டு எழுதினார்.

நாளை இலங்கை புறப்பட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு வேண்டிய வித விதமான அழகிய துணிமணிகளாகப் பார்த்து, தங்கள் பெட்டியில் நிரப்பிக் கொண்டிருந்தனர் பாபுவும், ராதாவும்.

அன்று வியாழக்கிழமை

விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தமது காரில் பரமகுரு குடும்பத்துடன் மீனம்பாக்கம் விமான நிலையத்தை அடைந்துவிட்டார். அவரை வழியனுப்ப அவரது கம்பெனியின் உயர் அதிகாரிகள் வந்திருந்தனர்.

திருமணம் ஆன புதிதில், காந்திமதி கணவருடன் சேர்ந்து ஜப்பான், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கெல்லாம் உல்லாசப் பொழுது போக்காகப் போய் வந்திருக்கிறார். ஆனால் பாபுவுக்கும், ராதாவுக்கும் இதுதான் முதல் விமானப் பயணம்.

பஸ்; ரயில் டிக்கெட் போலல்லாமல், விமானப் பயண டிக்கெட்டே பெரிதாக பார்ப்பதற்கு அழகாக இருந்தது. காரிலிருந்து, டிரைவர் இறக்கி வைத்திருந்த அவர்களது சாமான்கள், பெட்டிகள் எல்லாம் ஒவ்வொன்றாக எடை போடப்பட்டு