பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தென்னை மரத்தீவினிலே...

வந்து விட்டீர்களே?” என்று கேட்டான். அந்த இடம் அச்சமாகத்தான் இருந்தது.

நெடுஞ்சுவர்களுடன் கூடிய நீளக் கோட்டையும், கோட்டை வாயிலில் வரிசையாக பீரங்கிகளும் இருந்தன.

“இந்தக் கோட்டைக்குள் நுழைந்தால் கோயிலைக் காணலாம். புராதனப் பெருமை மிக்க திருகோணமலை திருகோணேசுவரர் ஆலயத்தை இடித்துவிட்டு போர்ச்சுக்கீசியர் தங்களுக்கென இக்கோட்டையைக் கட்டிக் கொண்டார்கள். அவர்களுடைய நினைவுச் சின்னமாக இக்கோட்டை இருந்தாலும், உள்ளே திருக்கோணேசுவரர் எல்லாருக்கும் அருள் பாலித்துக் கொண்டு தான் இருக்கிறார்,” என்று கூறி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

எல்லாரும் திருகோணேசுவரரை வணங்கி பிரார்த்தித்துக் கொண்டனர்.

“திருகோணமலை இலங்கை நாட்டின் சிறப்பான நகரம் என்பதோடு, தமிழர் அதிகம் வாழும் பகுதியாகவும் விளங்குகிறது,” என்றார் கனக சபை.

“அடுத்து நாம் காணப்போகும் இடம் நுவாரலியா. நுவாரலியா 7500 அடி உயரத்தில் உள்ள மலைப் பிரதேசம். தமிழகத்தில் ஊட்டி இருப்பதைப் போல் இலங்கையில் இந்த இடம் குளிர்பபிரதேசமாக விளங்குகிறது. ராமாயண