பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தென்னைமரத் தீவினிலே...

காசி, ராமேஸ்வரம் என்று தமிழர்கள் இணைத்துக் கூறுவதேபோல, ‘கண்டி, கதிர்காமம்’ என்று இலங்கையர் கூறுவது வழககம். முருகன் பெருமையை விளக்குகிற்து கதிர்காமம்: புத்தர் சிறப்பை உணர்த்துகிறது கண்டி.

கண்டி நகரம் மலைகளுக்கிடையே கிண்ணம் போல் அமைந்திருக்கிறது. ஊருக்கு முன்னால் நான்கு மைல் சமவெளிப் பரப்பில், எண்ணிக்கையில்லா, வண்ண வண்ணப் பூக்களைக் கொண்டு, பொட்டானிக்கல் கார்டன் என்ற தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இங்குள்ள மிகச் சிறந்த பூங்காக்களில், கண்டியும் ஒன்று, என்று விளக்கிய கைடு கனகசபை, இதோ தெரிகிறதே இதுதான் புகழ் பெற்ற கண்டிபுத்தர் ஆலயம். ‘புத்தமாளிகை’ என்று இந்த ஆலயத்திற்குப் பெயர்.

புத்தர் பாதம்பட்டு ‘ஸ்ரீபாத’, என்று அழைக்கப்படும் இந்த இடம் புத்தர் வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது .

மறைந்த புத்தரின் உடல், ‘குசி’ என்னும் நகரில் எரிக்கப்பட்டு, அந்த அஸ்தி எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, எட்டு இடங்களில் புதைக் கப்பட்டு ஆங்காங்கே புத்தர் ஆலயங்கள் எழுப்பப்பட்டன.

இந்த எட்டு புனிதஸ்தலங்களையும், ‘சேதியங்கள்’ என்று அழைக்கின்றனர். புத்த துறவிகள் தங்கியுள்ள இடங்கள், ‘புத்த விஹார்’ என்று