உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

93

அழைக்கப்படுகின்றன. கிண்டியில் ‘தலதா’ மாளிகையில் புத்தரின் பல்லை தங்கத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள். கிண்டியிலுள்ள இந்தப் புனித மாளிகை இலங்கைக்கே பெருமையூட்டுவதாகும என்றார் கனகசபை.

அழகிய வேலைப்பாடு கொண்ட புத்தர் ஆலயத்தைச் சுற்றிப் பார்த்தபிறகு பரந்த புல்வெளியில் உட்கார்ந்து அனைவரும் உண்டனர்.

அடுத்து நாம் காண வேண்டிய இடம் அநுராதபுரம் என்னும் அழகிய நகரமாகும்.

“இலங்கைத் தீவிலேயே சிறப்பானதொரு இடம் பெற்றது; பாரதத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது: பெளத்தர்களின் தலைநகராக விளங்கும் சிறப்பைப் பெற்றுள்ளது இந்த அநுராதாபுரம்!” என்றார்.

கனகசபை குழந்தைகளைப் பார்த்து, “முதலில் போதி மரத்தையும், புத்தரையும் வழிபட்டு விட்டு வந்து விடலாம் என்று கூறி எல்லோரையும் போதி மரத்திற்கு அழைத்துச் சென்றார். இங்கு வருபவர்கள் முதலில் போதி மரத்தை தரிசிப்பது வழக்கம். நாமும் அப்படியே செய்யலாம்” என்றார் கனகசபை,

தங்கமணியும், ராதாவும் அழகிய படிக்கட்டுகளை உடைய புனித நீர்க்குளம் ஒன்றைக் கண்டனர். அதில் அழகான தாமரை பூத்திருந்தது.