இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒரு புதிய லட்சாதிபதி உருவாகிறான்
இரவு மணி எட்டு. காலையில் சுற்றுலாவுக்கு சென்றவர்கள் இன்னும் வந்து சேரவில்லை, பங்களாவில் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. காலை பத்து மணிக்கு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பரமகுரு அப்போது தான் வீடு திரும்பியிருந்தார்
போன் அடித்தது. சட்டென்று எழுந்து சென்று போனை எடுத்தார் பரமகுரு எதிர் முனையில் சிங்கப்பூரிலிருந்து மாமா பேசினார். சற்று உரக்கவே தெளிவாக காதில் விழும்படியே பேசினார்.
“பரமு, இரண்டு தடவை உனக்கு நான் ‘கால்’ போட்டேன். என்னுடைய மகிழ்ச்சியை உன்னோடு உடனே பகிர்ந்து கொண்டுவிட வேண்டும் என்று தான் அப்படிச் செய்தேன். பிசினசை ‘பார்க்கெய்ன்” பண்ணி 58 லட்சத்திற்கு முடித்து