உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் வைணவம் என்ற ஒரு கருத்தாக்கத்தை டாக்டர் தொ.பரமசிவன் முன்வைக்கிறார். அதன் நாட்டார்மரபுச் சார்பை இதன் மூலம் வலியுறுத்துகிறார். அது 'தென்கலை' என்ற பழைய அடையாளத்தைத் தாண்டி வளருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முறையியல் ரீதியாக சமய ஆய்வுகளை உபநிடத உச்சியிலிருந்து துவங்காமல் உள்ளூர்ச் சங்கதிகளிலிருந்து தொடங்குங்கள் என்று இந்நூல் கூறுகிறது. வைதீக வைணவம் தமிழ்நாட்டார் வைணவம் என்ற எதிர்வு குறித்து இனி ஆய்வாளர்கள் பேசத் துவங்கலாம். தமிழ் வைணவம் தமிழ்ச் சைவம் என்ற எதிர்வும் இந்நூலின் கட்டுரைகளில் தென்படுகிறது. தமிழ் வைணவம் தமிழ்ச் சைவம்போல் உடைமைசார்ந்ததாக. அரசியல் ஆளுமை சார்ந்ததாக இருக்கவில்லை என்ற கூற்றும் நூலினுள் உள்ளது. ஆட்சேபிப்பவர்கள் இருப்பார்கள். தனை சரி, எம்.என்.ஸ்ரீநிவாஸ் போல் ஒருபுறச் சாய்வு நமக்கு உதவாது. வைணவத்திற்கு நாட்டார் அடித்தளம் உண்டு. சந்தேக மில்லை. ஆயின் வைதீகமும் அதற்குள் வேலை செய்தது. தனக்கேற்ப விஷயங்களை ஆட்படுத்திக்கொண்டது. திசைகளிலும் நாம் சேர்த்து யோசிக்க வேண்டும். இரண்டு டாக்டர் தொ. பரமசிவன் அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள். ந. முத்துமோகன். viii