________________
அடுத்த கட்ட வளர்ச்சியாக சமணர் குடும்ப அமைப்பில் கணவன் காலடியில் மனைவி விழுந்து வணங்கும் நியதி உருவாயிற்று. 'கொழுநன் தொழுதெழுவாள்' என்று திருவள்ளுவர் பெண்களைக் குறிப்பதும் இவ்வகையில்தான். தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் ருவான காலடி வணக்கம் பற்றிய செய்திகளை நிறையக் காணுகிறோம். இளங்கோவடிகள், கவுந்தியடிகள் என்ற பெயர் வழக்குகள், துறவிகளான அவர்கள் காலடி வணக்கத்திற்குரியவர்கள் என்று காட்டுகின்றன. "முடிகெழுவேந்தர் மூவர்க்குமுரியது அடிகள் நீரே அருளுதிர்" என்கிறார் சாத்தனார். ஆய மகளான மாதரி, துறவியான 'கவுந்தி ஐயையைக் கண்டு அடிதொழுது" வணங்குகிறாள். சிலம்பின் காலத்திலேயே கணவனின் காலடியில் மனைவி விழுந்து வணங்கும் வழக்கமும், தமிழகத்தில் உருவாகி நிலை பெற்றிருக்க வேண்டும். இக்காலத்தில் மனைவி கணவனை 'அடிகள்' என்றே அழைக்கிறாள். 'அமுதம் உண அடிகள் ஈங்கென'க் கண்ணகி கோவலனை உணவுண்ண அழைக்கிறாள்.. மனைவியின் நிலையில் கருதப்பட்ட மாதவியும் 'அடிகள் முன்னர்யானடி வீழ்ந்தேன்' என்று தொடங்கி கோவலனுக்குக் கடிதம் எழுதுகிறாள். அக்கடிதத்தைக் கோவலன் பெற்றோருக்கும் அனுப்பும்போது தன் பெற்றோரை 'அடிகள்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறான். எனவே, சிலம்பின் காலத்தில் துறவிக ளோடு குடும்ப அமைப்பில் கணவன். பெற்றோர் ஆகியோரும் காவடி வணக்கத்திற்கு உரியவராகக் கருதப்பட்டுள்ளனர். அக்காலத்தில் 'அடிகள்' என்ற சொல் புறவாழ்க்கை சார்ந்ததாக அதாவது அரசன், கடவுள் ஆகியோரைக் குறிக்கப் பயன்படுத்தப் படவில்லை. துறவிகளையும் குடும்ப அமைப்பில் மரியாதைக்குரியவர்களையும் குறிக்கவே அச் சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது. 13