உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பக்தி இயக்கம் எழுந்தபோது சமண, பௌத்த மதங்கள் தளர்வடையத் தொடங்கின. ஆனால் அதற்குச் சற்று முன்னரே அடிகள் என்ற சொல்லும் அதற்குரிய பொருளும் சைவ வைணவ மதங்களைப் பாதித்து விட்டன. செங்குட்டுவன் சிவதீட்சை பெற்றவன் என்பதை என்கிறார் 'தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்' ளங்கோவடிகள். பக்தி இயக்க நூல்களான தேவாரத்திலும் நாலாயிர திவ்வியப்பிரபந்தத்திலும் கடவுளை குறிக்க 'அடிகள்' என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. நனந்தலைய திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே. (திருநல்லூர் - திருத்தாண்டகம்) என்று இறைவன் காலடிகளைத் தலைமேல் தாங்கும் தீட்சை முறையினைக் குறிப்பிடுகிறார் திருநாவுக்கரசர். சிவபெருமானின் காலடிகள் அப்பூதி நாயனாரின் தலையில் பூவாக விளங்கியது. 'அழலோம்வும் அப்பூதி குஞ்சிப்பூவாய் நின்ற சேவடி' என்பது அவர் பாட்டாகும். குடும்ப அமைப்பிலிருந்து பக்தி இயக்கத்திற்குத் தாவிய இவ்வழக்கம் மீண்டும் குடும்ப அமைப்பில் வலிமை பெறுகிறது. தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு ஆண்டாள் திருமாலை வேண்டுகிறார். கணவனின் காலில் விழுந்து வணங்குவது மட்டுமல்ல மனைவி செய்ய வேண்டியது; அடிமை உணர்வோடு அவனுக்குக் கால் பிடித்தும் விட வேண்டும் என்னும் கருத்து அவர் பாடலில் வெளிப்படுகிறது. 14