பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 99

(3)

(பல்லவி)

கோபியர்தம் கோகுலத்தில் கூட்டம் கூடினர்; பாவித்தவர் அழகினைக்கொண் டாடிப் பாடினர்!

(அநுபல்லவி) பாவையரே, என்றனைப்போல் பூவையர்கள் மூவுலகில்

யாவரடி என்றனக்கீ டாவரடி? என்றுரைத்துக்

(கோபி)

(சரணங்கள்;

இந்திரை உமைவாணி என் அழ காமோஅடி? சுந்தரன் பாரியும் எனக்குச் சம்மத மாவாளோ? இந்திராணி மோகினியும் ஈடில்லாத என்னுடைய சுந்தரவடிவுக் கீடோ? சொல்லடிஎன் றே உரைத்துக்

- (கோபி)

கண்ணன் என்னைக் கண்டுவிட்டால் கலங்குவாண்டி;

மணி வண்ணன்.எ சீனப் பார்த்துவிட்டால் மயங்குவாண்டி, வெண்ணெய்தந்தால் என்னிடத்தில் வேணவிச்

வாசமடி: - உண்மையுள்ள பிரீதியடி உறுதியடி என்றுரைத்துக் (கோபி)

பச்சைவண்ணன் பகடிமென்றன் பங்கடிஎன்பாள் ;

அதி

இச்சைமிக என்னிடத்தில் இருக்கடி என்பாள்.

அச்சுதன்என் அழகைக்கண்டால் ஆசைமிக

அதிகமென்பாள். - உச்சிதமா என்னேமிக உகப்பனடி என்றுரைத்துக்

- (கோபி)