பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாரை வேண்டுதல்

குட்டிக்கொண்டு தண்டனி ட்டேன்;

சேவிக்கிறேன் நான் உமக்குக் குத்தங்குறை உள்ள தெல்லாம்

அத்தனையும் போக்கி வச்சுத் தொப்பைக் கணபதியே,

வந்து பணிந்தேன் கான்; தொந்தி விநாயகரே,

தொழுது பணிந்தேன் கான்: ஆத்தங்கரை ஓரத்திலே

அரச மரத்தடியில் குயிலும் படிக்குமேற்கே

துயிலும் படித்துறையில் சொகுசாக வீற்றிருக்கும்

தந்தி முகவோனே, நேரழகாய் வீற்றிருக்கும்

ஆனை முகவோனே, வந்தபேரை வரவழைச்சு

மனச்சித்தம் தான் இரங்கிச் சிந்தித்த காரியங்கள்

செயமாக ஆனக்கால் வடையும் அதிரசமும்

வடைப்பருப்பும் மனேகரமும் இளநீரும் செங்கரும்பும்

எள்ளுருண்டை மோதகமும்