பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

శి,

தெய்வங்கள் எண்ணுத எண்ணமெண்ணி எல்லவரும் என்னசெய் வோமென்று மனத்தில்எண்ணிப் பண்ணுத துதிகள் பண்ணிக் கோபியர்கள் பாங்காய்ப்பல தெய்வத்தைப் பிரார்த்தித்தார்.

(மன்ன)

(23)

அல்லோல கல்லோலம் ஆச்சுதிப்போ: அம்மா யமு ைதேவியரே, எல்லோரையும் கரைசேர்த்தாய்; நீரில் எட்டுக் குடம்தேன் விட்டிடுவோம்.

எம்பெருமான் கண்ணனுடன் ஏழைகள் அக்கரை சேர்த்துவிட்டால் சம்போ, சிவசங்கர னே,உனக்கு கும்பாபி ஷேகங்கள் பண்ணிவைப்போம்.

குழகன்கந்த பாலனுடன் காங்கள். கூடியே அக்கரை சேர்ந்துவிட்டால் பழனிவாழ் முருகேசா, உனக்குப் பஞ்சா மிர்தங்களும் பண்ணி வைப்போம்.

பாலன்இந்தக் கண்ணனுடன் நாங்கள் பாவையர் அக்கரை சேர்ந்துவிட்டால் ஆவடிக் கறுப்பா, மதுரை வீரா, உனக்கு ஆறுகுடம் கள்ளும்கட்டுக் கரும்பும் வைப்போம்.