பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 32 தெய்வங்கள்

உத்தமி யசோதையால் உரலில்கட் டுண்டு ஒடியே உரலினுடன் மருதமரம் ரெண்டும் சாய்ந்திடச் செய்தவர் சாபமது நீங்கச் சந்தோஷ மாகவுே தாயிடம் வந்து ஆயருடன் கூடியே ஆநிரை மேய்த்து ஆசையால் காளிங்கன் முடியில் கடித்துக் கோவர்த்த னந்தன்னைக் குடையாய்ப் பிடித்துக் குழலூதிக் கோவலரைக் கூடியே களித்து அக்ரூரர் வந்தங் கழைத்திட மகிழ்ந்து அண்ணனுடன் கூடியே அன்புடன் உகந்து மதுரைமா நகர்வத்து மாமனேக் கொன்று மகிழ்வுடன் வசுதேவர் தேவகியைக் கண்டு அண்னன்டல ராமருடன் ஆனந்த மாகி அழகுள்ள துவாரகை நகர்தன்னில் ஏகிப் பத்திரிகை தந்தமறை யோனுடன் சென்று பrமாய் ருக்மிணி தேவியைக் கண்டு சந்தோஷ மாகவே தூக்கிமடி வைத்துச் சட்டெனவே தேரதை கடத்தியே களித்துக் காட்சியாய்த் துவாரகா நகர்தன்னில் வந்து கன்னிகை ருக்மிணியைக் கல்யாணம் செய்தார். அளித்தார் அன்பர்; துதித்தார் பலர்; இரைத்தார்மனம் பதித்தார். கருணுகர வருணுலய சரணுகர வரதன்தனை

ஏலேலோ ஏலேலோ!