பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபியர் முறையீடு

கிருஷ்ணன் செய்தி கேளும்;-மாயக் கிருஷ்ணன் செய்தி க்ேளும்: அரிது தவழ்ந்துவந்து-எங்களே அணைத்துக் கொள்கிருனே! உரல்அடுக்கி ஏறித்-தயிர்பால் உறியை உருட்டருனே! பின்னே வந்து மெதுவாய்ப் பெண்கள் பின்னல் பற்றி இழுப்பான்; - திரும்பிப் பார்த்துக் கேட்டால்-யாரோ தெரியா தென்று சொல்வான்; முகத்துக் கெதிர்ே வந்து - விரைவில் முத்தம் இட்டு மறைவான்; தேடிப் பார்க்கும் போது-எங்கும் தெரிந்தி டாமல் ஒளிப்பான்; எங்கள் புருஷர் கண்டால்-காங்கள் என்ன செய்வோம் அம்மா? - குழந்தை என்று பார்த்தேன்;-அவன்செய் கொடுமை மெத்தச் சகியோம், . பொறுத்த வரைக்கும் போதும்-உன்மகனுக்குப் புத்தி சொல்லும் அம்மா!