பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனிடம் முறையீடு கட்டசெடி பக்கவில்ல-விட்டகன்று கனவில்ல;

குட்டியும் பொறக்கவில்லை-கோவிந்தா, என் பட்டியும் நெறையவில்லையே!

சட்டி பானே காணவில்லை;-வெட்டியமண்

போதவில்லை; -

மட்டு மட்டாய்ப் போனதையா-கோவிந்தா:

செட்டுக் கட்டாய் ஆனதையா!

ஆறும் பெருகவில்லை;-ஐயன் தேரும் ஒடவில்லை; நீரும் பெருகிவந்ததே;-கோவிந்தா, ஊரும் தெரியவில்லையே!

ஆல மரத்துக்கிளி-ஐயன் வளர்த்தகிளி, சோலைப் பசுங்கிளியோ?-கோவிந்தா, காலன் வரும் ஒளியோ?

ஒண்னும் அறியவில்லை;-கண்ணும் தெரியவில்லை; பொன்னியும் ஓடிவருகிருள்;-கோவிந்தா, மென்னியும் அடைச் சிருமுதே!

லேக் கடல்அலையில்-ஏலம் எடுத்துவந்தேன்; ஜாலிப்பு வேணுமையா,-கோவிந்தா,

நான் இப்போ அடிமை ஐயா!

ஊனும் இறங்கவில்லை; உள்ளம் படியவில்லை; காணும் இமைநேரத்தில்-கோவிந்தா, உயிரை அடிமைவச் சேனே! -

பண்ணும் பரிகாசம்-புண்ணுச்சு ஒருதோசம்; எண்ண முடியவில்லையேl-கோவிந்தா, கண்ணுலே பார்த்திடுவாயே.