பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளி கல்யாணம்

வெள்ளித் தேருமுண்டு; திருநாளுண்டு; தேருக்கு வந்த ஜனங்கள் உண்டு-வள்ளி கெழவரென்று சொல்லாதடி, கெட்ட கோபம் நேருமடி, பாட்ட னென்று சொல்லாதடி: பைம்புருஷன் -

நானேதாண்டி, பத்து வயசுப் பாலகனே, பெத்த தாயை நான்மறந்தேன்; ஆனபோலத் தேகமெல்லாம் பூனேபோலக் குங்குதே

வள்ளி - பூனேபோலக் குங்குதடி உள்எலும்பு நோகு தடி. மோட்டு முள்ளிலே நான்கடந்து முழங்கா லெல்லாம் நோகுதடி; காட்டு முள்ளிலே நான் நடந்து காலும் கையும் ரத்தமடி;-மயில் வாகனத்தில் வந்தேன் வள்ளி-சிவ சுப்பிரமணியன் நான்தாண்டி. வேல்முருகன் நான்தாண்டி உன்னேத் தொட்டுப் பொண்னே, வள்ளி உலகத்தையே நான்மறந்தேன்; அடிச்சாமெத்த அடிபொறுப்பேன்; அண்டையிலே தங்கியிருப்பேன்; குத்தில்ை குத்தேற்பேன்;* கூட மாடத் தங்கியிருப்பேன்.

(பா-ம்.) குத்துரைப்பேன்.