பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

சங்கரர் ஏசல்

சங்கரரை ஏசிப் பாடுங்கடி பொண்காள், சந்ததி சம்பத்துண் டாகுமடி, - மங்கள மாகவே சங்கரரை ஏசி வணங்கிச் சோபனம் பாடுங்கடி பொண்காள், வணங்கிச் சோபனம் பாடுங்கடி.

கட்டுக்கட் டாகவே மற்றப்பொன் மாளிகை இஷ்டமுடனே பலஇருக்கக் கொட்டாய் அடிச்ச மசான மதிலே குடியாய் இருப்பதைப் பாருங்கடி,-சிவன் குடியாய் இருப்பதைப் பாருங்கடி.

வேறுவே ருயப்பல மாதிரி தன்னிலே விஸ்தாரச் சோமன் பலஇருக்க நாறும் புலித்தோலே காணம்சு டாமலே நாடித் தரிச்சதைப் பாருங்கடி,-சிவன் நாடித் தரிச்சதைப் பாருங்கடி.

வாசனை குறையாத மல்லிகை செண்பகம் மட்டற்ற புஷ்பம் பலஇருக்க வேடிக்கை யாகவே வில்வமும் தும்பையும் வேண்டி அணிந்ததைப் பாருங்கடி,-சிவன் வேண்டி அணிந்ததைப் பாருங்கடி.

செம்பொன்னும் ரத்னமும் கூடிச் சமைந்ததோர் சிங்கார மான நகைஇருக்கக் கம்பி ஓலேயும் கட்டணியும் பாம்பும் கனிவாய் அணிந்ததைப் பாருங்கடி,--சிவன் கனிவாய் அணிந்ததைப் பாருங்கடி.