பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

தெய்வங்கள் 21

ஜாதிகொள் எண்ணெய்த் தயிலம் குழம்புகள் சந்தன எண்ணெய் பலஇருக்க ஜோதி முடியை ஜடையாயத் தரிச்சவர் திரிகிற நேர்த்தியைப் பாருங்கடி;- சிவன் திரிகிற நேர்த்தியைப் பாருங்கடி.

பூசு புனுகுபன் னிருஜவ் வாதுடன் வாசனைத் துாளும் பலஇருக்க

வேடிக்கை யாகவே வெண்சாம்ப லேப்பூசி

வருகிற நேர்த்தியைப் பாருங்கடி;-சிவன் வருகிற நேர்த்தியைப் பாருங்கடி.

ஊர்வசி மேனகை ரம்பை திலோத்தமை உத்தம ஸ்த்ரீகள் பலர் இருக்கப் பர்வத புத்ரியாம் பார்வதிதன்னைப் - பாரியாய்க் கொண்டதைப் பாருங்கடி;-சிவன் பாரியாய்க் கொண்டதைப் பாருங்கடி.

ஒடும் குதிரைகள் சிங்கம் முதலான உல்லாசமான ரதம் இருக்க மாட்டின்மேல் ஏறியே மானம்.கூ. டாமலே வருகிற கேர்த்தியைப் பாருங்கடி,-சிவன் வருகிற நேர்த்தியைப் பாருங்கடி.

இப்படியே சொல்லிப் பாடுங்கடி-பொண்காள் இஷ்டசம் பத்துண் டாகுமடி.