பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யரதாருடன்

(தியாகேசர் துதி) (பல்லவி) தேவியுடன் கூடிச் சிறந்து கடம்புரியும் திவ்யரதா ரூடனே, சித்ருபனே!

(சரணங்கள்) மேவும் அடியார்க்கு விளங்கும்சர் வேசனே, பாவிப்போர் ஹ்ருதயத்தில் பரமப்ர காசனே, மூவு லகமும் குலுங்கி அதிர்ந்திட முழங்கும் வாத்யாதி கோஷம் சிறந்திடத் தேவ தேவர்கள் கண்டு மகிழ்ந்திடச் சேர்ந்து பரிமள கந்தம் பொழிந்திட. (தேவி) பாலநேத் திரங் தன்னில் காந்திப்ர காசிக்கப் பாத நூபுரப் பிரபை சோபிக்க மாலும் மனமகிழ்ந்து ம்ருதங்கம் வாசிக்க மங்கைமுக கமலம் விகளிக்க நாலு முகவரும் ஜாலர் வாசிக்க கங்கை சரஸ்வதி வீணே கோஷிக்க சில முனிவர்கள் கண்டு பூஜிக்கத் திக்குப் பதிகள் பூமாரி வருவதிக்க. (தேவி) வஞ்சகத் தைவிடுத்து வந்து பணிந்தோர் மாயை தன்னைத் தடுத்துச் செஞ்சடை யைவிரித்து முயலகனைச் சேவடி யால்மி தித்து பஞ்ச முகத்தாலும் கிருபை கொடுத்து மிஞ்சின ஜனன வித்தினைக் கிரகித்து அஞ்சிக்கீழ் நின்ற அடியார் முகம்பார்த்து ஆரூர்தனில் வந்தென்னே ஆளவே உதித்து.

(தேவி)