பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயோசனம் என்ன?

(இது பாபநாச முதலியார் கீர்த்தனம்)

(பல்லவி)

பேரும் கல்ல தியாகர், ஊர்செல்வத் திருவாரூர், பிரயோசனம் என்ன சொல்லுவேன்?

(அநுபல்லவி) வாரிச் சொரி வீரென்று வார்த்தைமாத் திரம்ஸ்வாமி வாராமல் ஒருபொல்லா தவனேவா சலில்வைத்திர்.

- * (பேரும்)

(சரணங்கள்) வாசல்நந் திக்குத்தப்பி வந்து தேகி என்ருல்

வலதுகை அனல்ஏந்திச் சுடுமே ஸ்வாமி. வீசும் அனலைத்தள்ளி வருவோம்என் ருல்மனம்

வீரவெண் டயத்துக்கு மிகப்பயப் படுமே.

(பேரும்)

வீரவெண் டயத்துக்குள் ஆகிய ஆடரவின்

விஷத்தைச் சொரியுமது என்றே இருக்கிறீர்; பேரை கம்பிவந்தோம் என்றுசொல் லப்போளுல்

பித்தனென் ருெருபேரை வைத்துக்கொண்

டிருக்கிறீர். (பேரும்) பித்தரோ தியாகரே, பேசும்என் ருல்பெரும் பாபவி காசரென்று அசைக்கிறீர் ஸ்வாமி. எத்தனை சொன்னலும் உம்மை விடேனென்ருல் இந்தாஎன் றேற்ேறைத் தந்துபின் அசைக்கிறீர்.

(பேரும்)