பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவகாமவல்லி துதி

| பல்லவி)

இனிமேலா கிலும் உன்றன் கருணைக்கண் பாரம்மா,

என் கவலையைத் தீரம்மா!

(அநுபல்லவி)

தினமும் திருகடம்செய் அனகன்றன் ஒருபாகச் செல்வியே, சிவகாம வல்லியே, பரிவாக (இனி)

(சரணங்கள்;

1. இழுக்கும் புனலில் தூண்டில் இனிகான் சிறுமீன்போல்

இந்தப் பவவலையில் வந்து சிக்கவேயலால் செழிக்கும் உலகில் கான் உன் வழித்தொண்டன்

ஆகவில்லை. தினரட் சகிஎன்னும் திறத்துக் கிதுசெயலா? (இனி)

3. அருளாம்கொம் புத்தேனே அறிந்திடாத முடமா? அடியேன்அஞ் ஞானத்துக் கமரும் இருப்பிடமா? மருவும்என் உடல்பாவம் பெருகிப்பொங் கும்குடமா? வணங்கும்என் னே ஆட்கொள்ள மனத்தினில்

கபட மா? (இனி)

3. உன்னை அடுத்த எனக் கின்னும்வி சாரமா?

உகந்துகுக தாஸன் வாழ்த்துமையே.இது சாரமா?* என்னேக்காத் திடஉனக் கென்னபெரும் பாரமா? ஏழைக் கருள்புரிய இத்தனே நேரமா? (இனி) *ராமஸ்வாமி பாரதியாருடையது போலும்!