பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளக்கு வழிபாடு

விளக்கே, திருவிளக்கே, வேந்தன் உடன்பிறப்பே, ஜோதி மணிவிளக்கே, ரீதேவி, பொன்மணியே, அந்தி விளக்கே, அலங்கார நாயகியே, காந்தி விளக்கே, காமாட்சித் தாயாரே, பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக் குளம்போலே எண்ணெய்விட்டுக் கோலமுடன்

ஏற்றிவைத்தேன். ஏற்றினேன் நெய்விளக்கு, என்றன் குடிவிளங்க. வைத்தேன் திருவிளக்கு, மாளிகையில் ஜோதிவர; மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் . கண்டுமகிழ்ந்தேன்.

மாங்கல்யப் பிச்சை, மடிப்பிச்சை தாரும்.அம்மா! சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாரும்.அம்மா! பொட்டி நிறையப் பூஷணங்கள் தாரும்.அம்மா! பட்டி நிறையப் பால்பசுவைத் தாரும்.அம்மா! கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும்.அம்மா! புகழுடம்பைத் தாரும் அம்மா, பக்கத்தில்

கில்லும்.அம்மா! அல்லும் பகலும்என்றன்.அண்டையிலே

கில்லும்.அம்மா! சேவித் தெழுந்திருந்தேன்; தேவி வடிவம்கண்டேன். வஜ்ரக் கிரீடம்கண்டேன், வைடூர்ய மேனிகண்டேன். முத்துக்கொண் டைகண்டேன்; முழுப்பச்சை

மாலைகண்டேன். 5